-
Recent Posts
Recent Comments
Archives
Categories
Meta
சிலந்தி பதில்கள் !
கேள்வி:- மக்கள் நலக் கூட்டணி என்ன ஆயிற்று?
சிலந்தி பதில்:- தலைவர் கலைஞர் அடிக்கடி ஒரு பழமொழியைச் சுட்டிக் காட்டுவார். “முள்ளும் முனையிலே மூன்று குளம் வெட்டினேன், அதில் இரண்டு பாழ், ஒன்றில் தண்ணீரே இல்லை” – என்ற அந்தப் பழமொழிதான் நமது நினைவுக்கு வருகிறது !
Posted in Uncategorized
Leave a comment
சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் !
சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!
YESTERDAY · PUBLIC
மத்திய கல்விக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று மத்திய அரசின் புதிய வரைவுக் கல்விக் கொள்கையை தமிழக அரசு மனப்பூர்வமாக எதிர்க்க வேண்டும்!சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்!
“மாநில உரிமை, சமூக நீதி மற்றும் சமத்துவ உரிமை, இடஒதுக்கீடு உரிமை, தமிழ்மொழி உரிமை, கல்வி உரிமைச் சட்டம் வழங்கியுள்ள உரிமை, சிறு பான்மையினர் உரிமை என்று ஒட்டுமொத்த நலனைப் பாதிக்கும் வகையில் வெளியிடப்பட்டிருக்கும் புதிய வரைவுக் கல்விக் கொள்கையை மாநில அரசு வருகிற 25 அன்று நடைபெற விருக்கும் 2 புதிய கல்விக் கொள்கை வரைவு குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று மனப்பூர்வமாக எதிர்க்க வேண்டும்” என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு :-
புதிய கல்விக் கொள்கையைப் புகுத்துவதற்கு பாரதீய ஜனதா கட்சியின் தலை மையில் உள்ள மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இக்கொள்கையை உருவாக்க ஒரு கல்வியாளர் தலைமையில் குழுவை மத்திய மனித வளமேம்பாட்டுத்துறை அமைச்சகம் அமைக்கவில்லை. அதற்கு பதில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.எஸ்.ஆர் சுப்பிரமணியன் தலைமை யில் ஒரு குழுவை அமைத்து, அந்த குழுவினர் நாடு முழுவதும் கருத்துக் கேட்பு நிகழ்ச்சிகளை நடத்தியதாக கூறி, 44 பக்கங்கள் கொண்ட “புதிய கல்விக் கொள்கை வரைவு” ஒன்றை மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சக வெப்சைட்டில் வெளியிடப்பட்டது.
நாடு முழுவதும் புதிய கல்விக் கொள் கைக்கு எதிர்ப்பு கிளம்பியது. தமிழகத்தில் ஆசிரியர்கள், மாணவர்கள், அரசியல் கட்சிகள் அனைத்தும் இந்த புதிய கல்விக் கொள்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தின. “தமிழை பின்னுக்குத் தள்ளி சமஸ்கிருதத்தை மடியில் தூக்கி வைத்து தாலாட்ட முன் வருவதா?” என்று புதிய கல்விக் கொள்கையின் மீதான எதிர்ப்பு மாநிலத்தில் காட்டுத் தீ போல் பரவியது.
இந்நிலையில் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக திராவிடர் கழகம் நடத்திய ஆர்ப் பாட்டத்தில் தலைவர் கலைஞர் அவர்களின் ஆலோசனையின் படி பங்கேற்ற நான், “புதிய கல்விக் கொள்கையானது அரசியல் சட்டம் வகுத்துக் கொடுத்துள்ள சமூக நீதி, சமத்துவம், மாநில உரிமைகள் போன்ற அனைத்திற்கும் விரோதமாக இருக்கிறது. சிறுபான்மையினர் உரிமைகளை பறிக்கும் விதத்திலும் இருக்கிறது” என்று சுட்டிக்காட்டினேன்.
சட்டமன்றத்தில் ஒத்திவைப்புத் தீர்மானம்!
இது தொடர்பாக சட்டமன்றத்திலும் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் ஒத்தி வைப்பு தீர்மானம் கொடுத்தேன். இந்த விவாதத்திற்கு பதிலளித்தப் பேசிய மாநில உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், “தமிழகத்தில் சமஸ்கிருதம், இந்தி போன்றவற்றை திணிக்க எந்தவிதத்திலும் அனுமதிக்க மாட்டோம். தமிழகத்தின் நலன்கள் முழுமையாக பாதுகாக்கப்படும். நமது மொழி, கலாச்சாரம், தன்மை பாதுகாக்கப்படும். சிறுபான்மையினர் நலன் காக்கப்படும். புதிய கல்விக் கொள்கை குறித்து நன்கு பரிசீலித்து தமிழக அரசின் கருத்து தெரிவிக்கப்படும்” என்று அறிவித்தார்.
இந்நிலையில் வருகின்ற 25.10.2016 அன்று புதிய கல்விக் கொள்கை மற்றும் கல்வி உரிமை சட்டத்தின் கீழுள்ள கட்டாய தேர்ச்சி முறை போன்றவை குறித்து கருத்துகளைக் கேட்க 64-வது “மத்திய கல்வி ஆலோசனைக் குழு” கூட்டத்தை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் நடத்துகிறது.
இதற்கு முன்பு நடைபெற்ற இதுபோன்ற 63-வது கூட்டத்தில் மற்ற மாநிலங்களின் கல்வி அமைச்சர்கள் கலந்து கொண்டு தங்கள் மாநிலத்தின் சார்பில் கருத்துகளை எடுத்து வைத்தனர். ஆனால் தமிழகத்தின் சார்பில் கல்வி அமைச்சர் கலந்து கொள்ளவில்லை. அதற்குப் பதில் துணைச் செயலாளர் அந்தஸ் தில் ஒரு அதிகாரியை அனுப்பி, அக்கூட்டத் தில் பங்கேற்க வைத்தது கவலையளிப்பதாக அமைந்து விட்டது.
மாநில உரிமை, சமூக நீதி மற்றும் சமத்துவ உரிமை, இட ஒதுக்கீடு உரிமை, தமிழ் மொழி உரிமை, கல்வி உரிமைச் சட்டம் வழங்கியுள்ள உரிமை, சிறுபான்மையினர் உரிமை என்று ஒட்டுமொத்த நலனை பாதிக்கும் வகையில் வெளியிடப்பட்டிருக்கும் புதிய வரைவு கல்விக் கொள்கையை மாநில அரசு மனப்பூர்வமாக எதிர்க்க வேண்டும். வருகின்ற 25 ஆம் தேதி நடைபெறும் புதிய கல்விக் கொள்கை வரைவு குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகத் தின் சார்பில், புதிய கல்விக் கொள்கையால் வரக்கூடிய பாதிப்புகளை தடுத்து நிறுத்தும் வகையில் ஆணித்தரமான கருத்துகளை எடுத்து வைக்க, அந்த கூட்டத்திற்கு உயர் கல்வித் துறை அமைச்சரை அனுப்பி வைக்க வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.
Posted in Uncategorized
Leave a comment
சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் !
சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!
YESTERDAY · PUBLIC
மத்திய கல்விக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று மத்திய அரசின் புதிய வரைவுக் கல்விக் கொள்கையை தமிழக அரசு மனப்பூர்வமாக எதிர்க்க வேண்டும்!சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்!
“மாநில உரிமை, சமூக நீதி மற்றும் சமத்துவ உரிமை, இடஒதுக்கீடு உரிமை, தமிழ்மொழி உரிமை, கல்வி உரிமைச் சட்டம் வழங்கியுள்ள உரிமை, சிறு பான்மையினர் உரிமை என்று ஒட்டுமொத்த நலனைப் பாதிக்கும் வகையில் வெளியிடப்பட்டிருக்கும் புதிய வரைவுக் கல்விக் கொள்கையை மாநில அரசு வருகிற 25 அன்று நடைபெற விருக்கும் 2 புதிய கல்விக் கொள்கை வரைவு குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று மனப்பூர்வமாக எதிர்க்க வேண்டும்” என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு :-
புதிய கல்விக் கொள்கையைப் புகுத்துவதற்கு பாரதீய ஜனதா கட்சியின் தலை மையில் உள்ள மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இக்கொள்கையை உருவாக்க ஒரு கல்வியாளர் தலைமையில் குழுவை மத்திய மனித வளமேம்பாட்டுத்துறை அமைச்சகம் அமைக்கவில்லை. அதற்கு பதில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.எஸ்.ஆர் சுப்பிரமணியன் தலைமை யில் ஒரு குழுவை அமைத்து, அந்த குழுவினர் நாடு முழுவதும் கருத்துக் கேட்பு நிகழ்ச்சிகளை நடத்தியதாக கூறி, 44 பக்கங்கள் கொண்ட “புதிய கல்விக் கொள்கை வரைவு” ஒன்றை மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சக வெப்சைட்டில் வெளியிடப்பட்டது.
நாடு முழுவதும் புதிய கல்விக் கொள் கைக்கு எதிர்ப்பு கிளம்பியது. தமிழகத்தில் ஆசிரியர்கள், மாணவர்கள், அரசியல் கட்சிகள் அனைத்தும் இந்த புதிய கல்விக் கொள்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தின. “தமிழை பின்னுக்குத் தள்ளி சமஸ்கிருதத்தை மடியில் தூக்கி வைத்து தாலாட்ட முன் வருவதா?” என்று புதிய கல்விக் கொள்கையின் மீதான எதிர்ப்பு மாநிலத்தில் காட்டுத் தீ போல் பரவியது.
இந்நிலையில் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக திராவிடர் கழகம் நடத்திய ஆர்ப் பாட்டத்தில் தலைவர் கலைஞர் அவர்களின் ஆலோசனையின் படி பங்கேற்ற நான், “புதிய கல்விக் கொள்கையானது அரசியல் சட்டம் வகுத்துக் கொடுத்துள்ள சமூக நீதி, சமத்துவம், மாநில உரிமைகள் போன்ற அனைத்திற்கும் விரோதமாக இருக்கிறது. சிறுபான்மையினர் உரிமைகளை பறிக்கும் விதத்திலும் இருக்கிறது” என்று சுட்டிக்காட்டினேன்.
சட்டமன்றத்தில் ஒத்திவைப்புத் தீர்மானம்!
இது தொடர்பாக சட்டமன்றத்திலும் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் ஒத்தி வைப்பு தீர்மானம் கொடுத்தேன். இந்த விவாதத்திற்கு பதிலளித்தப் பேசிய மாநில உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், “தமிழகத்தில் சமஸ்கிருதம், இந்தி போன்றவற்றை திணிக்க எந்தவிதத்திலும் அனுமதிக்க மாட்டோம். தமிழகத்தின் நலன்கள் முழுமையாக பாதுகாக்கப்படும். நமது மொழி, கலாச்சாரம், தன்மை பாதுகாக்கப்படும். சிறுபான்மையினர் நலன் காக்கப்படும். புதிய கல்விக் கொள்கை குறித்து நன்கு பரிசீலித்து தமிழக அரசின் கருத்து தெரிவிக்கப்படும்” என்று அறிவித்தார்.
இந்நிலையில் வருகின்ற 25.10.2016 அன்று புதிய கல்விக் கொள்கை மற்றும் கல்வி உரிமை சட்டத்தின் கீழுள்ள கட்டாய தேர்ச்சி முறை போன்றவை குறித்து கருத்துகளைக் கேட்க 64-வது “மத்திய கல்வி ஆலோசனைக் குழு” கூட்டத்தை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் நடத்துகிறது.
இதற்கு முன்பு நடைபெற்ற இதுபோன்ற 63-வது கூட்டத்தில் மற்ற மாநிலங்களின் கல்வி அமைச்சர்கள் கலந்து கொண்டு தங்கள் மாநிலத்தின் சார்பில் கருத்துகளை எடுத்து வைத்தனர். ஆனால் தமிழகத்தின் சார்பில் கல்வி அமைச்சர் கலந்து கொள்ளவில்லை. அதற்குப் பதில் துணைச் செயலாளர் அந்தஸ் தில் ஒரு அதிகாரியை அனுப்பி, அக்கூட்டத் தில் பங்கேற்க வைத்தது கவலையளிப்பதாக அமைந்து விட்டது.
மாநில உரிமை, சமூக நீதி மற்றும் சமத்துவ உரிமை, இட ஒதுக்கீடு உரிமை, தமிழ் மொழி உரிமை, கல்வி உரிமைச் சட்டம் வழங்கியுள்ள உரிமை, சிறுபான்மையினர் உரிமை என்று ஒட்டுமொத்த நலனை பாதிக்கும் வகையில் வெளியிடப்பட்டிருக்கும் புதிய வரைவு கல்விக் கொள்கையை மாநில அரசு மனப்பூர்வமாக எதிர்க்க வேண்டும். வருகின்ற 25 ஆம் தேதி நடைபெறும் புதிய கல்விக் கொள்கை வரைவு குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகத் தின் சார்பில், புதிய கல்விக் கொள்கையால் வரக்கூடிய பாதிப்புகளை தடுத்து நிறுத்தும் வகையில் ஆணித்தரமான கருத்துகளை எடுத்து வைக்க, அந்த கூட்டத்திற்கு உயர் கல்வித் துறை அமைச்சரை அனுப்பி வைக்க வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.
Posted in Uncategorized
Leave a comment
தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் சிவசாமி மறைவுக்கு தளபதி மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தி !
தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் சிவசாமி அவர்களின் எதிர்பாராத மரணம் மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது. தமிழகத்தில் விவசாயிகள் பெரும் நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் சூழலில், அவர்களுக்காக சளைக்காமல் போராடும் மனத்துணிவு கொண்ட சிவசாமி அவர்கள் மரணமடைந்திருப்பது பேரிழப்பாகும்.
டாக்டருக்குப் படித்தவரான சிவசாமி தன்னை முழுமையான விவசாயிகளின் தோழனாக்கிக் கொண்டு, நாராயணசாமி நாயுடு அவர்களுடன் இணைந்து நின்று போராட்டக் களம் கண்டவர். எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் அவர்களின் கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்ட நிலையில், 1989ல் தலைவர் கலைஞர் தலைமையிலான தி.மு.கழக அரசு அமைந்ததும், இந்தியாவுக்கே முன்னோடியாக விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு சிவசாமி அவர்கள் பங்கேற்ற போராட்டத்திற்கு வெற்றிப் பரிசை அளித்தது.
தலைவர் கலைஞர் அவர்கள் மீதும், என் மீதும் தனிப்பட்ட அன்பு கொண்ட சிவசாமி அவர்கள், கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் 29-4-2016 அன்று என்னை அவர் சந்தித்த போது, கழகம் ஆட்சி அமைய வாழ்த்து தெரிவித்ததுடன், விவசாயக் கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்தார். ஆட்சி அமைக்கும் வாய்ப்பு அமையாவிட்டாலும் விவசாயிகளின் நலனுக்காகக் குரல் கொடுப்பதை தி.மு.கழகம் நிறுத்திவிடவில்லை.
இந்நிலையில், சிவசாமி அவர்கள் காலமானார் என்ற அதிர்ச்சி செய்தி மிகுந்த வேதனையை உண்டாக்குகிறது. அவரை இழந்த வாடும் குடும்பத்தாருக்கும் விவசாயிகள் சங்கத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், விவசாயிகளின் நலனுக்காக சிவசாமி அவர்கள் முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்ற தி.மு.கழகம் தொடர்ந்து குரல் கொடுக்கும் என்ற உறுதியினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
Posted in Uncategorized
Leave a comment
அ.தி.மு.க. ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு படும் பாடு தலைவர் கலைஞர் அறிக்கை !
அ.தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கைப் பொறுத்தவரை அமைதிப் பூங்காவாகத் திகழ்வதற்கு இவைதான் அடையாளமா?
முதலமைச்சர் ஜெயலலிதாவின் உரை வெளிவந்த அதே நாள் நாளேடுகளில் வந்துள்ள சில செய்திகளைக் கூற வேண்டுமானால், சென்னை கல்லூரி மாணவர் உட்பட இரண்டு பேர் வெட்டிக் கொலை; தளி அருகே வீட்டில் 4 பேரைக் கட்டிப் போட்டு 25 பவுன் நகை, 26 ஆயிரம் ரூபாய் கொள்ளை; ராயப்பேட்டையில் பூட்டிய வீட்டுக்குள் தாய், 3 மகள்கள் கொடூரக் கொலை; சென்னை நுங்கம்பாக்கம், புகைவண்டி நிலையத்தில் அதிகாலையில் பெண் என்ஜினியர் சுவாதி கொலை; கேளம்பாக்கம் அருகே வாலிபர் ராஜா கழுத்து அறுக்கப்பட்டு கொலை; அம்பத் தூரில் கிணற்றில் தள்ளி தாய் கொலை என்று 9 கொலைகள் ஒரே நாளில் நடைபெற்றுள்ளன.
விருதுநகர் மாவட்டத்தில், திருத்தங்கலில் உள்ள பெருமாள் கோவில் திருவிழா பத்திரிகை யில் அமைச்சர் பெயர் இடம் பெறவில்லை என்ப தற்காக அந்தக் கோவில் செயல் அலுவலரை அ.தி.மு.க. வினர் தாக்கி அவர் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டுள்ளாராம்.
24-6-2016 தேதிய “தினமலர்” நாளேட்டில் “கொலையாய் நடக்கிறது; பயமாய் இருக்கிறது – நடுரோட்டில் வெட்டிச் சாய்க்கும் கூலிப்படைகள் – நடுக்கத்தோடு வாழும் வட சென்னை மக்கள்” என்ற தலைப்பில் அரை பக்கத்திற்கு சட்டம் ஒழுங்கு பற்றித்தான் எழுதியுள்ளது.
Posted in Uncategorized
Leave a comment
இலட்சியத்தை அடைய ………..
இலட்சியத்தை அடைய வேண்டுமானால் உங்களது மனோபாவம் மிக இயற்கையாக ஏழு குணங்களைப் பெற்றிருக்க வேண்டும் என்கிறார் நெப்போலியன் ஹில். அவை,
1. தைரியமாக எந்த ஒரு காரியத்தையும் தொடங்கும் குணம்.
2. கற்பனைத் திறமையுடன் எதையும் பார்க்கும் குணம்.
3. ஆழ்ந்து சிந்தித்து வேலைகளை ஒழுங்குப் படுத்தி, அமைக்கும் குணம்.
4. சிந்தனையைச் சிதறவிடாது ஒருமுகப்படுத்திக் கவனமுடன் செயல்படுவது.
5. நேரத்தையும் பணந்தையும் திட்டமட்டுச் செலவு செய்வது.
6. எப்போதும் சுறுசுறுப்புடனும், ஊக்கத்துடனும் மனத்தை வைத்திருப்பது.
7. தன்னை அடக்கித் திருத்திக் கொள்ளல்.
Posted in Uncategorized
Leave a comment
தனி சிறப்புமிக்க அரசியல் தலைவர்’ என்ற பெயரில் கலைஞர் கருணாநிதிக்கு விருது; அமெரிக்க நிறுவனம் வழங்கியது !
அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் ரோச்சஸ்டன் என்ற நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தின் தலைவர் காஜா மொய்தீன், நிர்வாக இயக்குனர் ஹாசிம் ஆகியோர் நேற்று(24.06.2016) தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதியை சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார்கள். அப்போது, ‘தனி சிறப்புமிக்க அரசியல் தலைவர்’ என்ற விருதினை கலைஞர் கருணாநிதிக்கு அவர்கள் வழங்கினார்கள்.
ரோச்சஸ்டன் நிறுவனம், ஆண்டுதோறும் உலகின் சிறந்த சிந்தனையாளர்களுக்கும், மக்கள் தலைவர்களுக்கும் இந்த விருதினை வழங்கி வருகிறது. இந்த ஆண்டு தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு வழங்கப்பட்டுள்ள விருதில், ‘‘50 ஆண்டுகளுக்கும் மேலாக உலகமெங்கும் உள்ள மக்களுக்கு ஊக்கம் அளிக்க கூடிய வகையில் போற்றுதலுக்குரிய தலைவராகவும், அரசியல் சிந்தனையாளராகவும், எழுத்தாளராகவும், மொழி அறிஞராகவும், பன்முக ஆற்றலோடு செயல்பட்டு வரும் தங்களுக்கு இந்த விருதினை வழங்குவதில் பெருமை கொள்கிறோம்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விருது வழங்கப்பட்டபோது, தி.மு.க. பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் உடன் இருந்தார்.
Posted in Uncategorized
Leave a comment
பட்டுக்கோட் டைக்கு வழி எது என்று கேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்லுகிறார் ஜெயலலிதா!
முதலமைச்சர் ஜெயலலிதா கச்சத் தீவு பற்றி எவ்விதத் தேவையோ, அடிப்படையோ இல்லாமல் மீண்டும் தமிழகச் சட்டப்பேரவையில் எனக்குக் கேள்வி எழுப்பியிருக்கிறார். சாதாரணமாக அமைச்சர்களை நோக்கித்தான் பேரவையில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்புவார்கள். ஆனால் ஜெயலலிதா என்னிடம் திரும்பத் திரும்பக் கேள்வி கேட்கிறார். நான் இரண்டு பக்கங்களுக்கு முரசொலியில் கச்சத் தீவு பற்றி விரிவாக விளக்கங்களை அளித்த பிறகும், அதில் ஜெயலலிதா எந்தெந்தச் சந்தர்ப்பங்களில் கச்சத் தீவு தாரை வார்க்கப்பட்டதை நியாயப்படுத்திக் குறிப்பிட்டது பற்றிச் சுட்டிக்காட்டிய பிறகும் அதைப் படிக்காமல் என்னிடமே கேள்வி கேட்கிறார். பேரவையில் என்னுடைய விளக்கங்களைப் படித்துக் காட்ட முன் வந்த தம்பி துரைமுருகனையும் பேசுவதற்கு அனுமதிக்காமல் ஜெயலலிதா, அவருக்கு எழுதிக் கொடுத்ததை அப்படியே படித்திருக்கிறார். அவர் கேட்டுள்ள கேள்விகளுக்கான விளக்கத்தை என்னுடைய உடன்பிறப்புகளுக்கான நீண்ட மடலில் அளித்து விட்டேன். அளித்ததோடு மட்டுமல்லாமல், அவர் பிரதமர்கள் நரசிம்மராவுக்கும், வாஜ்பாய்க் கும் எழுதிய கடிதங்களில் அவரைக் காட்டிக் கொடுப்பதாக உள்ள வாசகங்களை அப்படியே ஆங்கிலத்திலேயே குறிப்பிட்டு, அதற்கு விளக்கம் கேட்டிருந்தேனே, அதற்கு முதலமைச்சர் ஜெய லலிதா பேரவையில் விளக்கம் அளித்திருக்க வேண்டாமா? அதற்கு விளக்கமளிக்காமல், வினாக்களை மட்டும் தொடுத்துக் கொண்டிருந்தால், அவரிடம் விளக்கமளிக்க வேறெதுவும் இல்லை என்றுதானே பொருள்?
ஜெயலலிதா தனது முதல் கேள்வியாக, 1974ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் தேதி திடீரென்று அறிவிப்பு வந்தவுடன்தான் அதுபற்றி தெரியும் என்று சொன்னதும் – 15-4-2013 அன்று டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் தி.மு.க. அரசு வலியுறுத்தித்தான் சில ஷரத்துகள் ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டன என்று கூறுவதும் ஒன்றுக்கொன்று முரண்பாடானதில்லையா என்று கேட்டுள்ளார். இந்தக் கேள்வியை ஜெயலலிதா இப்போது புதிதாகக் கேட்கவில்லை. பல முறை ஜெயலலிதா கேட்டு, ஒவ்வொரு முறையும் நான் அதற்கு விளக்கமாகப் பதிலளித்திருக்கிறேன்.
சான்றோடு சொல்ல வேண்டுமேயானால், 3-5-2013 அன்று தமிழகச் சட்டப்பேரவையில் பேசும்போதே, “1974இல் திரு. கருணாநிதி கச்சத் தீவு இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்ட செய்தியை, பத்திரிகைகளில் பார்த்துத்தான் தெரிந்து கொண்டேன், பதறிப் போனேன் என்கிறார். ஆனால் 2013இல் ஒப்பந்தம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பே இவர் சொல்லித்தான் சில ஷரத்துக்கள் சேர்க்கப்பட்டன என்கிறார். இது என்ன பித்தலாட்டம்?” என்று பேரவையில் பேசி, அது அவை நடவடிக்கைக் குறிப்பிலும் இடம் பெற் றுள்ளது. ஜெயலலிதாவின் இந்தக் கேள்விக்கு 5-5-2013 அன்றே “வாய் நீளம் தோற்றுப் போகும்; வாய்மையே வெல்லும்” என்ற தலைப்பில் விளக்க மாகப் பதில் எழுதி, அது சிறு கையேடாகவும் வெளிவந்தது.
15-4-2013 அன்று “டெசோ” கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், “1974ஆம் ஆண்டு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்ட போது, கழக அரசு முதல் நிலையிலேயே அதனைக் கடுமையாக எதிர்த்தது. அதையும் மீறி ஒப்பந்தம் கையெழுத்தான போது, குறைந்தபட்சம் தமிழக மீனவர்களுக்கு கச்சத் தீவுப் பகுதியில் மீன் பிடிக்கும் உரிமையும், மீனவர்களின் வலைகளை அங்கே உலர்த்திக் கொள்வதற்கான உரிமையும் அந்த ஒப்பந்தத்தின் பிரிவுகளில் சேர்க்கப்பட வேண்டுமென்று கழக அரசு வலியுறுத்தி, அந்த ஷரத்துக்கள் சேர்க்கப்பட்டன” என்று கூறப்பட்டுள்ளது.
தீர்மானத்தில் ஒப்பந்தம் கையெழுத்தான போது என்றுதான் இருக்கிறதே தவிர, ஜெயலலிதா பேரவையில் கூறியதைப் போல, ஒப்பந்தம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பே என்று கூறப்பட வில்லை. அதாவது சில ஷரத்துக்களைச் சேர்க்க வேண்டுமென்று தி.மு.க. கூறியது, ஒப்பந்தம் கையெழுத்தான போதுதானே தவிர, ஜெயலலிதா தன்னுடைய வசதிக்குத் திரித்துக் கூறுவதைப் போல, ஒப்பந்தம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பே என்பது சரியல்ல.
26-3-2013 அன்று இலங்கைக் கடற்படை யினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து வேட்டை யாடுவது பற்றி ஒரு கவன ஈர்ப்புத் தீர்மானம் வந்த போது, முதலமைச்சர் ஜெயலலிதா தேவையில்லாமல் என்னைப் பற்றிக் குறிப்பிட்டு, 1974ஆம் ஆண்டு கச்சத் தீவு இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்டதாக வும், அப்போது தமிழக முதலமைச்சராக நான்தான் இருந்தேன் என்றும் குற்றஞ்சாட்டினார். அதற்கும் நான் 28-3-2013 அன்றே பதிலளித்திருந்தேன். அந்தப் பதிலில், “1974ஆம் ஆண்டில் கச்சத் தீவை இலங்கைக்குத் தருவதென்ற முடிவை மத்திய அரசு எடுத்த போது, அன்றைய தமிழகத்திலே இருந்த மாநில அரசான திராவிட முன்னேற்றக் கழக அரசு, அதற்குப் பெரும் எதிர்ப்பைத் தெரிவித்தது. அதையும் மீறி, சில காரணங்களைச் சொல்லி கச்சத் தீவு இந்திய அரசினால் இலங்கைக்கு வழங்கப்பட்டு விட்டது. அப்படி வழங்கப்பட்ட நேரத்திலேகூட, கச்சத் தீவிலே மீன் பிடிக்கும் உரிமை, யாத்திரை செல்கின்ற உரிமை, மீன் வலைகளைக் காய வைப்பதற்கான உரிமை இவைகள் எல்லாம் மீனவ மக்களுக்கு உண்டு என்கிற ஷரத்து அதிலே சேர்க்கப்பட வேண்டுமென்று அன்றைய தி.மு.க. அரசு வலியுறுத்தியதன் பேரில், அந்த ஷரத்து அதிலே சேர்க்கப்பட்டது” என்று குறிப்பிட்டிருக்கிறேன்.
இன்னும் சொல்லப்போனால், அந்தக் கடிதத்தில், கச்சத் தீவு ஒப்பந்தம் கூடாது என்றும், கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதியே என்றும், பல்வேறு ஆதாரங்களோடு முதலமைச்சர் என்ற முறையில்
6-1-1974 அன்றே, பிரதமராக இருந்த இந்திரா காந்தி அவர்களுக்கு நான் எழுதிய கடிதத்தையும் விளக்கியிருந்தேன். மேலும் அந்தக் கடிதத்தில், “திருமதி இந்திரா காந்தி பிரதமராக இருந்த நேரத்திலேதான் கச்சத்தீவினை இலங்கைக்குத் தர வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது அவர்கள் வெளியுறவுத் துறை அமைச்சரையும், அதிகாரிகளையும் என்னிடம் அனுப்பி விவாதிக்கச் செய்த போது, தமிழக அரசின் சார்பில் நாங்கள் எங்கள் கடுமையான எதிர்ப்பினைப் பதிவு செய்த பிறகும், கச்சத் தீவினை மத்திய அரசு இலங்கைக்கு வழங்கியது” என்பதையும் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறேன்.
1974ஆம் ஆண்டு இந்திய அரசுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தான செய்தி அறிந் ததும் நான் திடுக்கிட்டேன், பதறினேன் என்றால், ஒருசில காலமாகப் பேச்சளவில் மட்டும் இருந்து திடீரென தமிழக அரசின் ஒப்புதல் இல்லாம லேயே – தெரிவிக்காமலேயே வழங்கப்பட்டு விட்டதே என்ற அதிர்ச்சியில்தானே தவிர வேறல்ல. கச்சத் தீவை இலங் கைக்கு இந்தியா வழங்கக் கூடுமென்ற செய்தி அதற்கு முன்பே பல ஆண்டுகளாக இருந்து வந்தது. அதற்கும் சான்று கூற வேண்டுமேயானால், 29-3-1972 அன்றே, அதாவது ஒப்பந்தம் ஆவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, சட்டமன்றத்திலே கச்சத்தீவு பற்றிய ஒரு கேள்வியே இடம் பெற்று, அதற்கு நான் பதிலும் கூறியிருக்கிறேன். அந்தப் பதிலில், “நாம் கச்சத் தீவைக் குறித்த நியாயமான விவகாரங்களை மத்திய அரசுக்குத் தெரிவித்திருக் கிறோம். கச்சத்தீவுப் பிரச்சினை இந்திய அரசு தலையிட்டு சுமூகமாகத் தீர்க்கப்பட வேண்டிய ஒரு பிரச்சினை” என்று கூறியிருக்கிறேன். கச்சத் தீவு ஒப்பந்தம் கூடாது என்றும், கச்சத் தீவு இந்தியாவின் ஒரு பகுதியே என்றும், பல்வேறு ஆதாரங்களோடு முதலமைச்சர் என்ற முறையில் 6-1-1974 அன்று பிரதமர் இந்திரா காந்திக்குக் கடிதம் எழுதினேன்.
ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, மதுரையில் நான் பேசும்போது, “கச்சத் தீவு தமிழ்நாட்டிற்கே சொந்தம், இந்தியாவிற்கே சொந்தம் என்ற ஆதாரங் களையெல்லாம் பிரதமருக்கு எடுத்து வைத்தேன். எதையும் இலட்சியம் செய்யாமல், என்னை அழைத்து இதுபற்றி ஒரு வார்த்தைகூடப் பேசாமல், கச்சத் தீவை இலங்கைக்குத் தானம் செய்திருக்கிறார் பிரதமர்” என்றும்; திருச்சியிலே நான் பேசும்போது, “கச்சத் தீவு தமிழகத்தின் உரிமை. கச்சத் தீவுப் பிரச்சினையில் நாட்டில் இருக்கும் மக்கள் அனைவரும் ஒன்றாக இருக்கிறார்கள். அதைக் கேளாமல் இலங்கைக்குத் தூக்கிக் கொடுத்து விட்டு, ஒப்பந்தம் ஆகி விட்ட செய்தியை உலகுக்கு அறிவிக்கிறார்கள். நாம் பத்திரிகையைப் பார்த்துத் தெரிந்து கொள்கிறோம்” என்றும் பேசியிருக்கிறேன்.
ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு செய்தியாளர் கள் என்னிடம் ஒப்பந்தம் கையெழுத்தாகி விட்டதே, இனிமேல் எதுவும் திருத்தம் செய்ய முடியுமா என்று கேட்ட போது, “மனம் உண்டானால் மார்க்கம் உண்டு. செய்யலாம். ஒப்பந்தம் கையெழுத்தாகும் நேரத்திலோ அல்லது முந்தின நாளோ, தமிழக அரசின் சார்பில் முதலமைச்சரையோ அல்லது மற்ற அமைச்சர்களையோ டெல்லிக்கு அழைத்துப் பேசி இருக்கலாம். இந்த மாநில அரசைக் கலந்து கொள்ளாவிட்டாலும், மிக முக்கியமான பிரச் சினையில் பாராளுமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களையாவது அழைத்துப் பிரதம மந்திரி, சர்வ கட்சிக் கூட்டத்தைக் கூட்டி அவர்களது கருத்துகளை அறிந்து இருக்கலாம். அப்படிச் செய்யாதது வருந்தத்தக்கது” என்று பதிலளித்திருக்கிறேன்.
27-6-1974 அன்று கச்சத் தீவு ஒப்பந்தம் பற்றி மத்திய அரசின் அறிவிப்பு வந்ததும், 29ஆம் தேதி யன்று சென்னைத் தலைமைச் செயலகத்திலே அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைத்து, அவர்கள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் நான் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்து நிறைவேற்றப்பட்ட போது, அ.தி.மு.க. அந்தத் தீர்மானத்தை ஆதரித்துக் கையெழுத்திட மறுத்து விட்டது. அதுபோலவே கழக ஆட்சிக் காலத்தில் கச்சத் தீவை திரும்பப் பெறுவதற்கான தீர்மா னத்தை ஆளுங்கட்சியான தி.மு.க. கொண்டு வந்த போது, எதிர்க்கட்சியாக இருந்த அ.தி.மு.க., அதனை ஆதரிக்காமல் வெளிநடப்புச் செய்தது.
ஜெயலலிதா பேரவையில் பேசும்போது, 2008ஆம் ஆண்டு தனிப்பட்ட முறையில் உச்ச நீதி மன்றத்தில் அவர் வழக்குத் தாக்கல் செய்ததைக் கூறி, தி.மு.க. நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்துத்தான் 10-5-2013இல் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது ஏன்? என்று ஒரு கேள்வி எழுப்பியிருக்கிறார். 2008ஆம் ஆண்டுக்கு முன்பே 1997ஆம் ஆண்டே இந்தக் கச்சத் தீவுக்காக தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் ஒரு வழக்கினைத் தாக்கல் செய்து, பல ஆண்டுகள் ஆகியும் அந்த வழக்கில் ஒரு முடிவு காணப்பட வில்லை என்பதுதான் உண்மை.
15-4-2013 அன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற “டெசோ” அமைப்பின் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் இறுதியாக, “1974ஆம் ஆண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்யவும், கச்சத் தீவு இந்தியாவின் ஒரு பகுதிதான் என்பதைப் பிரகடனப்படுத்தவும், “டெசோ” அமைப்பின் மூலம் உச்ச நீதிமன்றத்தை அணுகுவதென முடிவெடுக்கப்பட்டது” என்று கூறப்பட்டிருப்பதில் இருந்தே, தி.மு.க. உச்ச நீதிமன்றம் செல்ல முடிவெடுத்தது டெசோ கூட்டத்தின் முடிவே தவிர, நாடாளுமன்றத் தேர்த லுக்காக அல்ல என்பதைத் தெளிவுள்ளவர்கள் புரிந்து கொள்ள முடியும்.
கச்சத் தீவுப் பிரச்சினையில் மத்திய அரசு உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்திற்கு தமிழக அ.தி.மு.க. அரசு பதிலளிக்க வில்லையே என்று 2013ஆம் ஆண்டு என்னிடம் ஒரு கேள்வி கேட்ட போது, “கச்சத் தீவு இந்தியாவுக்குத்தான் உரிமையானது என்பதைச் சுட்டிக்காட்டிடும் பல்வேறு ஆதாரங்களை எடுத்துக் காட்டி, நான் குறிப்பிட்ட வரலாற்றுப் பூர்வமான ஆதாரங்களையும், மேலும் தமிழக அரசிடம் இருக்கும் கூடுதல் ஆவணங்களையும் இணைத்து உச்ச நீதிமன்றத்தில் உரிய முறையில் தாக்கல் செய்வது மிக மிக அவசியமாகும் என்றும், அதனை தமிழக அரசு உடனே செய்திட வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டேன். இந்தப் பிரச்சினையில் நான் எடுத்துக் காட்டியதற்கு மேலும் வலுவூட்டும் வகையில் ராமநாதபுரம் சேதுபதி சமஸ்தானத்திற்கே கச்சத் தீவு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை வழங்கிட சேதுபதியின் வாரிசுகள் முடிவு செய்திருப்பதாகவும் ஏடுகளில் செய்தி வந்துள்ளது. மேலும் கச்சத் தீவினைத் திரும்பப் பெறுவதற்கு தமிழக அரசுக்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் வழங்குவோம் என்று அவர்கள் கூறியிருக்கிறார்கள். எனவே நான் ஏற்கனவே தெரிவித்த கருத்தின்படி தமிழக அரசு இனியும் சுணக்கமாக இல்லாமல், ராமநாதபுரம் மன்னர் குடும்பத்தினர் கூறியுள்ள அந்த ஆதாரங் களையும், தமிழக அரசிடம் உள்ள ஆவணங் களையும் திரட்டி உச்ச நீதிமன்றத்தில் எடுத்துக் காட்டிட முன்வர வேண்டுமென்று மீண்டும் வலியுறுத்துகிறேன்” என்று பதிலளித்திருந்தேன்.
கச்சத் தீவு பற்றிய வழக்கில் மத்திய அரசு, கச்சத் தீவு இலங்கையின் பகுதியில் இருப்பதை இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளது, இந்திய எல்லைக் கோட்டுக்குள் இருந்த கச்சத் தீவை இலங்கைக்குத் தாரை வார்த்துக் கொடுத்ததாக மாயை ஏற்படுத்துவது தவறானது என்று வாக்குமூலம் தாக்கல் செய்த போதுகூட, அதைக் கண்டித்து 1-9-2013 அன்று நான் அறிக்கை விடுத்தேன்.
ஆனால், இதே ஜெயலலிதாவின் அ.தி.மு.க. அரசு, உயர் நீதிமன்றத்தில் 2012ஆம் ஆண்டு வழக்கறிஞர் பி. ஸ்டாலின் தொடுத்த பொது நல வழக்கில் கொடுத்த வாக்குமூலத்தில் என்ன சொன்னார்கள் தெரியுமா? “1974ஆம் ஆண்டிலும், 1976ஆம் ஆண்டிலும் இலங்கை அரசுடன் கச்சத் தீவு சம்பந்தமாகச் செய்து கொண்ட ஒப்பந்தம், தமிழக அரசோடு கலந்தாலோசனை செய்யாமலும், பாக். நீரிணையில் பல்லாண்டு காலமாக மீன் பிடிப்பதன் மூலம் வாழ்வாதாரத்தைத் தேடி வரும் ஆயிரக் கணக்கான மீனவர்களின் நலனைக் கருத்தில் கொள்ளாமலும் செய்யப்பட்ட ஒன்றாகும் என்று திரும்பத் திரும்ப தமிழக அரசு சுட்டிக் காட்டி வருகிறது” (The Government of Tamil Nadu has also repeatedly made it clear that the Execution of 1974 and 1976 Agreements with Sri Lanka regarding the Katcha Theevu was signed without consulting Tamil Nadu and without due consideration to the welfare of thousands of Fishermen family who depend on fishing in the Palk-bay area for centuries together) என்று தமிழக அரசே நீதிமன்றத்தில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறது.
எனவே ஜெயலலிதா தமிழக மீனவர்கள் தினமும் அனுபவித்து வரும் வாழ்வாதாரப் பிரச்சி னைகளிலிருந்து கவனத்தைத் திசை திருப்பும் நோக்கத்தோடு, திட்டமிட்டு இந்தக் கச்சத் தீவுப் பிரச்சினையில் அரைத்த மாவையே திரும்பத் திரும்ப அரைக்கின்ற முயற்சியில் ஈடுபட்டிருக்கிறாரே தவிர வேறல்ல. நானும் ஒவ்வொரு முறை அவர் இந்தக் குற்றச்சாட்டைக் கூறுகின்ற நேரத்திலும் விளக்கம் அளித்திருக்கிறேன். ஆனால் அந்த விளக்கம் எதையும் அவர் படிப்பதில்லையோ அல்லது படித்தும் புரிந்து கொள்ளவில்லையோ அல்லது புரிந்தும் வேண்டுமென்றே அரசியல் நோக்கத்திற்காக இப்படிப் பேசுகிறாரோ என்ற சந்தேகம்தான் ஏற்படுகிறது.
மேலும் நேற்றையதினம் சட்டப்பேரவையில் பேசும்போது, கருணாநிதி தனது பதிலை சட்ட சபைக்கு வந்து சொல்லட்டும் என்றும், கழக உறுப்பினர்களைப் பார்த்து, உங்கள் தலைவர், தலைவர் தானா அல்லது இங்கே இருக்கின்ற எதிர்க்கட்சித் தலைவர்தான் உங்கள் தலைவரா என்றெல்லாம் கேட்டு, புலனாய்வுத் துறை மூலமாகவும், தனக்குச் சாமரம் வீசும் சில ஏடுகளின் வாயிலாகவும் “சிண்டு முடியும்” வேலையில் ஈடுபட்டு, அதிலே படுதோல்வி அடைந்த காரணத்தால், தற்போது பேரவையிலேயே முதலமைச்சர் பொறுப் பிலேதான் இருக்கிறோம் என்பதையே மறந்து விட்டோ, எப்படியோ கொள்ளைப் பணத்தோடும், தேர்தல் ஆணையத்தோடும், காவல் துறை உள்ளிட்ட நிர்வாகத் துறையோடும் பல முனைக் கூட்டணி அமைத்து தேர்தலில் ஒரு சில இடங்களை மக்களின் எண்ண ஓட்டத்திற்கு எதிராகக் கூடுதலாகப் பெற்று முதலமைச்சராக அமர்ந்து விட்டோம் என்ற அடங்காத இறுமாப்பிலோ இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கிறார். என்னைக் கேள்வி கேட்பதற்கு முன்பு, 22ஆம் தேதிய எனது அறிக்கையில் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் ஜெயலலிதா பதில் சொல்ல வேண்டாமா? அந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லி விட்டு அல்லவா என்னிடம் இந்தக் கேள்வியைக் கேட்க முன்வந்திருக்க வேண்டும்.
கச்சத் தீவை நான் தாரை வார்த்து விட்டதாகச் சொல்லும் ஜெயலலிதா, “கச்சத் தீவை மீட்பது விரைவில் நடக்கக்கூடிய ஒன்றாகத் தெரிய வில்லை” என்று கூறியது உண்டா இல்லையா? “கச்சத் தீவைப் பிரித்துக் கொடுத்தது, இரு நாடுகளுக்கும் இடையே நல்லுறவு ஏற்பட வேண்டும் என்பதற்காகத்தான்” என்று பிரதமர் நரசிம்மராவுக்கு ஜெயலலிதா எழுதியது உண்டா இல்லையா? “கச்சத் தீவில் இலங்கை நாட்டுக்கு உள்ள இறையாண்மையை ஏற்றுக் கொள்ளலாம்” என்று பிரதமர் வாஜ்பாய்க்கு ஜெயலலிதா கடிதம் எழுதியது உண்டா இல்லையா? என்றெல்லாம் நான் கேட்ட கேள்வி களுக்கு முதலில் பதில் சொல்ல வேண்டாமா? அது பற்றி வாயையே திறக்காமல், பேரவைக்கு என்னால் வர இயலாத ஓர் இடத்தினை ஒதுக்கி விட்டு, நான் அங்கே வந்து பதில் சொல்ல வேண்டுமென்பது, எந்த அளவுக்கு ஏளனம், கிண்டல், ஏகடியம் என்பதை தமிழ்நாட்டிலே உள்ள நடுநிலையாளர்களும் அரசியல் புரிந் தோரும் நன்றாகவே அறிவார்கள். பட்டுக்கோட் டைக்கு வழி எது என்று கேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்லுகிறார் ஜெயலலிதா! எங்கள் கட்சிக்கு தலைவர் யார், எங்கள் கட்சியின் சட்டமன்றக் கட்சித் தலைவர் யார் என்பதை எங்கள் கட்சியிலே உள்ள உறுப்பினர்கள் அனைவரும் அறிவார்கள். முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அது புரியவில்லை என்றால், அவர் நல்ல மருத்துவர்களை உடனடியாக நாடுவதே நல்லது!
தலைவர் கலைஞர்
Posted in Uncategorized
Leave a comment
“சட்டமன்றம் என்ன” பன்னீர்” வீட்டு அப்பன் சொத்தா …..?
“சட்டமன்றம் என்ன” “பன்னீர்” வீட்டு அப்பன் சொத்தா…?
ஒரு நிகழ்வில் பத்திரிகை மற்றும் காட்சி ஊடக நண்பர்கள் தலைவர் கலைஞர் அவர்களிடம், “சட்டமன்றத்தை தமிழக அரசு கூட்டாதது பற்றி” என்ற கேள்வியை முன் வைத்த பொழுது அதற்கு தலைவர் கலைஞர் அவர்கள், “தமிழக அரசு சட்டப் பேரவையை கூட்டாதது வருத்தம் அளிக்கிறது” என்று பக்குவத்துடன் ஒரு மூத்த அரசியல் தலைவராய், தமிழக சட்டமன்ற வரலாற்றில் மிக மூத்த உறுப்பினராய் உள்ள தலைவர் கலைஞர் அவர்கள் பத்திரிகை நண்பர்களுக்கு பதில் அளித்தார். ஆனால் அந்த ஒற்றை வரி பதிலுக்கு பல பக்கங்களில் யாரோ எழுதிக் கொடுத்ததை தன் கையெழுத்தைக்கூட நிமிர்ந்து போட வக்கற்ற சுய மரியாதைச் சுடரொளி, தன்மான வீரன், டெம்போ டிராவலர் வாகனத்தின் டயரைக்கூட வீழ்ந்து வணங்கும் மனித நேய பண்பாளர், பினாமி ஆட்சி யின் “பொம்மை” முதல்வர் பன்னீர் அவர்களே, உங்கள் அறிக்கையில் ஏதோ சொலவடையெல்லாம் பயன்படுத்தியுள்ளீர்கள், மகிழ்ச்சி. ஆனால் உங்களை நினைத்தவுடன் எனக்கு ஒரு வரி நினைவுக்கு வருகின்றது. அது என்ன தெரியுமா?
“நக்கிக் குடி அதையும் நல்லதென்று சொல்”
இது என் சொந்த வரி அல்ல… பாவேந்தர் பாரதிதாசனின் வைர வரிகள். உங்களுக்கு மிகப் பொருத்தமாய் இருக்கின்றது. ஆமாம் பன்னீர் அவர்களே, தி.மு.க.விற்கு எதிர்க்கட்சி அந்தஸ் தைக் கூட மக்கள் வழங்கவில்லை என்று கூறியுள்ள, நீங்கள் உங்கள் கட்சியின் வரலாற்றை என்றாவது திரும்பி பார்த்தது உண்டா? உங்கள் தலைவி, ஊழல் குற்றவாளி அம்மையார் ஜெயலலிதா வை எங்கள் கழகத்தின் கடைமட்டத் தொண்டன் தேர்தலில் தோற்கடித்த வரலாறு உங்களுக்குத் தெரியும் என்றே நினைக்கிறேன். ஒரு தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது எந்த இயக்கத்தையும் முடக்கிப் போட முடியாது. இன்னும் சொல்லப் போனால் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் வரிகளில் சொன்னால்,
“மூன்றாண்டு காலம் தி.மு.கழகம் ஆட்சியில் இல்லை, ஆனால் எல்லா பத்திரிகைகளிலும் தலைவர் கலைஞரும், கழகமும்தான் தலைப்புச் செய்தி”.
தலைவர் கலைஞர் சட்டமன்றத்திற்கு வர வேண்டும் என்றால் முதலமைச்சராக இருக்க வேண்டும் என்றும், அவரின் கடமை கையெழுத்து போடுவது மட்டும்தான் என்றும் அதுவும் பதவியை காப்பாற்றிக் கொள்ளத்தான் என்றெல்லாம் ஒரு முதலமைச்சருக்கு உரிய கண்ணியத்தை இழந்து அறிக்கை விட்டிருக்கும் “பொம்மை” திரு.பன்னீர் அவர்களே, ஒரு மிக முக்கிய வரலாற்று நிகழ்வை உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகின்றேன். அதுவும் உங்களுக்கு நேரடியாக தொடர்புடைய வரலாறு.
தலைவர் கலைஞர் என்ன, ஊழல் குற்றவாளி ஜெயலலிதா போல தேர்தலில் தோற்றுவிட்டால் கொடநாட்டிலும், சிறுதாவூரிலும் ஓய்வு எடுப்பவரா ?
மக்களைப் பற்றி சிந்திக்காமல், தன் தோழியையும் அவர் சகாக்களையும் மட்டும் நினைத்துப் பார்க்கின்ற படுபாதக செயலை செய்வது யார்? தலைவர் கலைஞர் எல்லா காலங்களிலும் முதலமைச்சராக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சித் தலைவராக இருந் தாலும் சரி, மிக சிறப்புடன் செயல்பட்டவர் என்பது வரலாறு.
சட்டமன்றக் கையெழுத்து
சட்டமன்றத்தில் தலைவர் கலைஞர் கையெழுத்து போடுவது என்பது பதவியை காப்பாற்றிக் கொள்ளத்தான் என்று கெக்கலி கொட்டியுள்ள தாங்கள் ஒரு கணம் கடந்த கால ஆட்சியை நினைத்துப் பார்க்க வேண்டும். கடந்த தி.மு.கழக ஆட்சியில் உங்கள் ஊழல் முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றக் கூட்டத்திற்கு வராமலும், சட்டமன்ற வருகை பதிவேட்டில் கையெழுத்து போடாமல் தொடர்ந்து இருந்ததையும் நாடு அறியும். ஆனால் நீங்கள் அறிந்த ஒரு செய்தி, “மூன்று முறை சட்டமன்றத்திற்கு ஒரு உறுப்பினர் வரவில்லை என்றால், நான்காவது கூட்டத்தொடரில் அவரை பதவி நீக்கம் செய்யலாம்” என்று விதி இருக்கும் பொழுது தொடர்ந்து நான்கு கூட்டத்திற்கு வரவில்லை. மூன்று கூட்டம், புனித ஜார்ஜ் கோட்டை யிலும், நான்காவது கூட்டம் புதிய சட்டப்பேரவை யிலும் நடைபெற்றது. இதில் எதிலும் கலந்து கொள்ளவில்லை உங்கள் அம்மையார். காரணம், அரசியல் காழ்ப்புணர்ச்சி, மக்களின் மீது கொண்ட வெறுப்புணர்ச்சி. ஆனால் திரு.பன்னீர் செல்வமாகிய நீங்கள், தலைவர் கலைஞரிடமும் அன்றைய சட்ட சபை சபாநாயகரிடமும் ஒரு கடிதம் கொடுத்தீர்களே, நினைவு இருக்கின்றதா? அந்தக் கடிதம் என்ன?
அம்மையார் ஜெயலலிதாவிற்கு உடல் நிலை சரியில்லை என்றும் ஆகவே கூட்டத்தில் பங்கேற் பதில் இருந்து விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்றும் தன் பதவியைக் காப்பாற்றத் துடித்த கதை இது. தலைவர் கலைஞர் அவர்கள் தாயுள்ளத்தோடு அந்தக் கூட்டத்தொடரில் ஒரு சிறப்பு தீர்மானம் கொண்டு வந்து, விதிவிலக்கு அளித்து உங்கள் அம்மையார் ஜெயலலிதாவிற்கு பதவியை பிச்சை போட்டது தலைவர் கலைஞர் அவர்களின் தலைமையிலான கழக அரசுதான்.
தலைவர் கலைஞர் அவர்கள் என்றுமே பதவியை ஒரு பொருட்டாய் கருதியது இல்லை. இந்த தமிழினத் திற்காக தலைவர் கலைஞர் அவர்களும், பேராசிரியர் அவர்களும் பதவிகளை துச்சமென தூக்கியெறிந்த வரலாறு உலகறியும். அதுமட்டுமா? சட்டமன்றத் திற்கு கையெழுத்துப் போட மட்டும்தான் தலைவர் கலைஞர் வருகின்றார் என்று வாய்க் கிழிய யாரோ எழுதிக் கொடுத்ததை நீட்டி முழக்கியுள்ள நீங்கள், தலைவர் கலைஞர் அவர்கள் பல முறை இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்கள். தன் உடல் நிலை கருதி தான் சக்கர நாற்காலியுடன் உள்ளே வந்து உட்காருவதற் கான வசதி செய்து தரப்படவில்லை யென்றும் அப்படியிருக்கையில் எப்படிதான் உள்ளே வந்து உட்கார முடியும் என்றார்.
பினாமி ஆட்சியின் பொம்மை முதல்வர் திரு.பன்னீர் அவர்களே, நீங்களும் உங்கள் ஆட்சியும் நடந்து கொண்ட விதம் இதுதான், ஆனால் தலைவர் கலைஞர் அவர்கள் புதிய சட்டமன்றம் கட்டிய பொழுது அவர்கள் அதனை பார்வையிட்டு ஏற்கனவே பெரிதாக இருந்த எதிர்க்கட்சி தலைவர் அறையை இன்னும் பெரிதாக் குங்கள் என்றும் இந்த அறை அந்த அம்மை யாருக்கு போதியதாக இருக்காது என்றும் மற்றொரு அறையை இடித்து எதிர்க்கட்சித் தலைவருக்கு அறை அல்ல, அரங்கத்தையே ஏற்படுத்தி கொடுத்த வர்தான் தலைவர் கலைஞர் அவர்கள்.
“தமிழ்நாட்டின் தனயன் தளபதி”
திரு.பன்னீர் அவர்களே தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைவர் கலைஞருக்கு மட்டும் தனயன் அல்ல, அவர் தமிழ்நாட்டு மக்களுக்காக தனயனாய் வீதி வீதியாய் சுற்றி மக்களை சந்திக்கின்றார். மக்கள் பிரச்சினைகளை களைய போராட்டக் களத்தில் தலைவர் கலைஞர் அவர்களின் வழியில் தமிழக மக்களின் துயர் துடைக்க வந்த அந்தத் தனயன் செயல்பட்டு கொண்டிருக்கிறார்.
மேலும் உங்கள் அறிக்கையில் நாடகம் அரங்கேற்றம் என்றெல்லாம் அறிக்கை விட்டு இருக்கும் தங்களுக்கு நான் நினைவு படுத்த விரும்புவது! தலைவர் கலைஞர் அவர்கள், திறம்பட நாடகம் எழுதி அதனை அரங்கேற்றம் செய்தார். ஆம், நாடக மன்றத்தில் மட்டும்தான். ஆனால் சட்டமன்றத்தையே நாடக மன்றமாக மாற்றிய பெருமை உங்கள் அம்மையாரையே சாரும். 1989 வரலாறு களையும் அதே நேரத்தில் நவீன கண்ணகி வேடம் போட்டு ஊர்வலம் போன நாடகக் கதையை ஊர் அறிந்தது! உலகம் பார்த்து சிரித்த நாடகம், எனக்கு நினைவுக்கு வருகின்றது. சட்டமன்றத்தை கூட்டச் சொல்வது என்பது அசாதாரண சூழ்நிலை நிலவுகின்றது, மக்கள் பிரச்சினை குறித்து பேசத்தானே தவிர உங்கள் அம்மையாரின் பிரச்சினை குறித்து பேச அல்ல ……,
திரு.பன்னீர் அவர்களே, நீங்கள் உங்கள் கட்சி தலைவி, ஊழல் குற்றவாளி அம்மையார் ஜெய லலிதாவிற்கு அடிமைப் புழுவாக இருங்கள். அதனைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை. ஆனால் மக்களுக்கு செய்ய வேண்டிய மக்கள் பணியை செய்துவிட்டு மற்ற வேலைகளை செய்யுங்கள். மீண்டும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் வரிகளுக்கு வருகின்றேன்.
“நக்கி குடி அதையும் நல்லதென்று சொல்
ஆமைபோல அடங்கி ஒடுங்கு”
நீங்களும் சரி, உங்கள் தலைவியும் சரி, கண்ணியம் காக்க மாட்டீர்கள் என்று தெரியும். ஆனால் நீங்கள் வகிக்கும் பொறுப்பிற்காவது கண்ணியம் காக்க வேண்டாமா? சட்டமன்றம் என்ன, மக்கள் மன்றமா, இல்லை உங்கள் அப்பன் வீட்டு சொத்தா?
-வழக்கறிஞர் தமிழன்பிரசன்னா
Posted in Uncategorized
Leave a comment